Header Ads

  • சற்று முன்

    முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 2ஆம் கட்டமாக ரூ.50கோடி ஒதுக்கீடு....

     

    தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டது.  இதற்கு ஒரே தீர்வு ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரிப்பது, அனைவருக்கும் சரிவர மருத்துவம் கிடைப்பதே..

    இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ,  கொரோனா தடுப்பு பணிகள், சிகிச்சை, நிவாரணம் உள்ளிட்ட தேவைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று வரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 181 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடை கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இதுவரை பெறப்பட்ட தொகையில் இருந்து ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை கொண்டு வரவும் ஏற்கெனவே முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 

    இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை ஆர்டி- பிசிஆர் உள்ளிட்ட  பரிசோதனை கருவிகள் வாங்க பயன்படுத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 1.6 லட்சம் அளவுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad