Header Ads

  • சற்று முன்

    2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவலர்- கொரோனாவால் உயிரிழப்பு..!


    சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையராக இருந்து வந்தவர் ஈஸ்வரன். இவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் உடல் நிலை இன்று மோசமான நிலையில்  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் உயிரிழந்திருப்பது காவல்துறையினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மறைந்த உதவி ஆணையர் ஈஸ்வரன் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக கொரோனா காரணமாக,காவல்துறையினர் உயிரிழப்பது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad