Header Ads

  • சற்று முன்

    கொரோனா:உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பங்களுக்கு 25 லட்சம் இழப்பீடு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

     



     

    கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள்,மருந்தாளுநர்கள் மரணமடைந்து வருகின்றன.இந்த நிலையில் கொரோனா சிகிச்சை பணியின் போது உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.




    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றும் அரும் பணியில் கடந்த ஓராண்டாக மருத்துவர்களும், செவிலியர்களும், இதர பணியாளர்களும் அயராது பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் தமது உயிரை கூட பொருட்படுத்தாமல் களப்பணி ஆற்றிய சில மருத்துவர்கள் தமது இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனர்.

    இது ஈடு செய்ய முடியாத பெரும் தியாகம் என்பதை உணர்ந்துள்ள தமிழக அரசு அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் சிகிச்சை பணியாற்றியபோது பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் தொகையை இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad