Header Ads

  • சற்று முன்

    ’தி ஃபேமிலி மேன் 2’ - சமந்தாவுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்..

     



     
    கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான இணையதொடர் ‘தி பேமிலி மேன் ’. இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  தேசியப் புலனாய்வு முகமையில் அச்சுறுத்தல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு அணியில் பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் சாகசங்களைச் சொல்லும் கதையே இந்த தொடர்.




    அமேசான் ப்ரைமில் வெளியான இந்த தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்த சீஸன் எப்போது என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இரண்டாவது சீஸன் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீஸனுக்கான ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் சமந்தாவும் நடித்துள்ளார்.

    இந்த ட்ரெய்லரில் "நான் எல்லோரையும் கொல்லுவேன்" என சமந்தா பேசுகிறார். இலங்கையின் வரைபடமும் சீருடையில் போராளிக் குழுக்கள் பயிற்சி பெறும் காட்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இலங்கையில் இருந்து வந்த தீவிரவாதிதான் சமந்தா என்றும், ,மனோஜ் பாஜ்பாயி அவரை பிடிக்கும் என்ஐஏ அதிகாரியாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. சமந்தா இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணாக கட்டப்பட்டுள்ளது.



    இதையடுத்த தமிழர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதாக இந்த தொடருக்கு எதிராக பலரும் தங்கள் கண்டனங்களை ட்விட்டரில் பதிவுசெய்து வருகின்றனர்.தமிழர்களை தீவிரவாதிகளாக தி பேமிலி மேன் 2 சித்தரிக்கிறது என்று விமர்சனம் குறித்து யூடியூபிலும் பேசப்பட்டு வருகிறது. இதனால் பலரும் இந்த சீரிஸ் குறித்து கொந்தளித்து வருகின்றனர். இதன் விளைவாக #FamilyMan2_against_Tamils என்ற டேக் வைரலாகி வருகிறது.


     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad