Header Ads

  • சற்று முன்

    முழு ஊரடங்கால் குழந்தை திருமணம் 40% அதிகரிப்பு - அமைச்சர் கீதா ஜீவன்




    தமிழகத்தில் கொரோனா 2 வது அலை காரணமாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டிலிருந்து மூடப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலைப் பயன்படுத்திக்கொண்டு பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த முழு ஊரடங்கில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் திருமணம் 40 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தர்மபுரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாகவும் செலவு குறைவாக ஆகும் என்பதால் பெற்றோர்கள் ஊரடங்கில் திருமணத்தை ஏற்பாடு செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், குழந்தை திருமணத்தை ஏற்பாடு செய்தாலோ திருமணத்தை நடத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



    குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம் இன்று காலை மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், குழந்தை திருமணத்தை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. அக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கீதா ஜீவன், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், குழந்தை திருமணத்தை ஊக்குவிப்போர் மீதும் திருமணத்தை நடத்துவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad