Header Ads

  • சற்று முன்

    5 மாவட்டங்களை ஆய்வு செய்கிறார் மு.க.ஸ்டாலின்.....


    கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக சேலம், திருச்சி, திருப்பூர், கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு பயணிக்க போவதாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

    தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் முகாமை முதல்வர் ஸ்டாலின், திருப்பூரில் இன்று(மே 20) துவக்கி வைக்கிறார். மாவட்டங்களில், கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்ற அவர்  மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். இதனிடையே சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, புதிய மருத்துவமனையை பார்வையிடுகிறார். பின்னர் பகல் 12:15 மணிக்கு, கோவை செல்லும் வழியில், திருப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நேதாஜி ஜவுளி பூங்காவிற்கு செல்கிறார். அங்கு, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.பகல் 1:30 மணிக்கு, கோவை சுற்றுலா மாளிகை செல்கிறார். அங்கு கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். இரவு 7:30 மணிக்கு, கோவையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்று  சுற்றுலா மாளிகையில் தங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும் நாளை காலை 9:45 மணிக்கு, மதுரை கலெக்டர் அலுவலகம் சென்று அங்கு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின், தோப்பூர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த பின்பு மாலை 5:00 மணிக்கு திருச்சி செல்கிறார். அங்கு எம்.சி., மருத்துவமனை, என்.ஐ.டி., ஆகியவற்றில் ஆய்வு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.அதிகாரிகளுடன் ஆலோசனை முடித்து, மாலை 6:15 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு இரவு 7:30 மணிக்கு, அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு, சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad