Header Ads

  • சற்று முன்

    இந்தியாவில் கொரோனா 50% பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!!


    உலகளவில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும்  நிலையில்  கடந்த ஏழு நாள்களில் உலக அளவிலான கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 50 % பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஏழு நாள்களில் உலக அளவிலான கொரோனா இறப்பில் இந்தியாவில் 30 %  பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக பதிவான கொரோனா பாதிப்புகள் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.அதில்  தெற்காசியாவிலே  இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவது தெரியவந்துள்ளது. இதனிடயே இந்தியா மட்டுமல்லாமல் அதன் அண்டை நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சர்வதேச அளவில் கொரோனா குறைந்து வரும் நிலையில்,
    தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 9-வது வாரமாக கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad