Header Ads

  • சற்று முன்

    மாதம் ரூ.5,000, இலவசக் கல்வி, ரேஷன்: மத்தியப் பிரதேச அரசு அதிரடி அறிவிப்பு

     


    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை அதி தீவிரமாகப் பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றில் தட்டுப்பாடு நிலவுகிறது.

    மத்தியப் பிரதேசத்திலும் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று (மே.12) ஒரே நாளில் 8,970 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். 84 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அம்மாநிலத்தில் கொரோனாவால் பெற்றோர்களை,  பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு சிறப்புத் திட்டங்களை மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து, அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கொரோனா பெருந்தொற்றில் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும், மாதாந்தோறும்

     ரூ.5,000 தொகையுடன் இலவச ரேஷனும் வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய குடும்பங்களில் இருந்து பணியாற்ற விரும்புவோருக்கு அரசு உத்தரவாதத்தின் கீழ் கடன்களும் வழங்க முடிவெடுத்துள்ளோம்'' என்றும் தெரிவித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad