Header Ads

  • சற்று முன்

    அடுத்த 5 நாட்களுக்கு மழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா??

     


    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெப்பச்சலனம் காரணமாக இன்று (29.05.2021) மற்றும் நாளை (30.05.2021) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 2 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    31.05.2021, 01.06.2021 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

    வருகிற ஜூன் 02 ஆம் தேதி  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், சுரைக்காற்றுடன் (30-40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழையும், பெய்யும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad