Header Ads

  • சற்று முன்

    கொரோனா நிவாரண நிதியாக இதுவரை 69 கோடி நன்கொடை...ஸ்டாலினின் அதிரடி உத்தரவு!!


    தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 7 ஆம் தேதி பதவியேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த பொது மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதன்படி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மே 17 வரை 69 கோடி நன்கொடை வந்துள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா நிவாரண நிதியில் இருந்து முதற்கட்டமாக ரூ.50 கோடியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

    மருத்துவர் நெருக்கடியும், நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களை காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஈகையும், இரக்கமும் ,கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் பொறுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் 11/ 5 /2021 அன்று வேண்டுகோள் விடுத்தேன். 

    இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விபரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்தோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர் . நேற்று வரை இணைய வழி மூலமாக 29.44 கோடி ரூபாயும் நேரடியாக 39.56 கோடி ரூபாயை மொத்தமாக 69 கோடி ரூபாய் நிவாரண நிதியாக பெறப்பட்டுள்ளது.

    முதல்வரை நிவாரண நிதிக்கு வந்துள்ள நன்கொடையை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை 69 கோடி நிதி முதல் கட்டமாக 50 கோடியை ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 69 கோடியில் ரெம்டெசிவர் உயிரை காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ.25 கோடி , மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் ரயில்களில் இருந்து கொண்டுவர 27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில்  கூறியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad