Header Ads

  • சற்று முன்

    பள்ளி கட்டடத்தை சீரமைக்கக்கோரி 8 வயது சிறுமி கடிதம்...! களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்...

     


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த அதிகை முத்தரசி என்னும்  8 வயது சிறுமி, தனது பள்ளிக்கட்டிடத்தைக் சீரமைத்துத் தரக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். வழக்கறிஞரான  தனது தந்தை பாஸ்கரின் வழிகாட்டுதலின் படி சிறுமி, ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிக்குச் சொந்தமான இடத்தை மீட்டுத்தரக்கோரியும், பள்ளிக் கட்டடத்தை சீரமைக்கக்கோரியும்  பல முறை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

    இது தொடர்பாக 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு புதிய பள்ளிக் கட்டடம் கட்டித்தர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

    இதனையடுத்து சிறுமிக்கு  பள்ளி மற்றும் அரசு தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவரது தந்தை, அதிகை முத்தரசியை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார்.  நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு மேலாகியும் பள்ளி நிர்வாகம் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

    எனவே சிறுமி  முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். சிறுமியின் கடிதத்தை ஏற்ற முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அமைச்சரும் இன்று  பள்ளிக்கு சென்று பார்வையிடுவதுடன், மாணவி அதிகை முத்தரசியின் இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்த உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

     

     

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad