Header Ads

  • சற்று முன்

    கொரோனா உருவானது எப்படி?? 90 நாட்களில் அறிக்கை - ஜோ பைடன் உத்தரவு

     


    கடந்த 2019 ஆ,ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத்தொடங்கியது  கொரோனா வைரஸ்.. இரண்டு ஆண்டுகளாக இந்த வைரஸ் உலக நாடுகளையே உலுக்கி வரும் சூழலில், லட்சக்கணக்கானோர்  உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் கொரோனா வைரஸ், வவ்வால் மாதிரியான பிற உயிர்களிலிருந்து பரவியதாக ஒரு சாராரும். ஆய்வு கூடத்தில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தினால் கொரோனா வைரஸ் உருவாகி உலகில்  பரவியதாகவும் பல்வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. 

    இருப்பினும், இதுகுறித்து விசாரிக்க பன்னாட்டு அமைப்புகள் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முகாமிட்டு விசாரித்து வருகிறது. அந்த அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு,  சீனாவின் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றிய மூன்று ஊழியர்கள் உலகின் முதல் கொரோனா தொற்று என கண்டறியப்படுவதற்கு முன்னதாக கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவித்தது.  இதனை சீனா திட்டவட்டமாக மறுத்தது.

     இந்நிலையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் இந்த தொற்றின் தோற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  கேள்வியெழுப்பியுள்ளார். 'இது குறித்த ஒரு இறுதி முடிவை எட்ட உங்களது முயற்சியை இரட்டிப்பாக கூட்டுங்கள். அதன் மூலம் ஒரு இறுதி முடிவுக்கு வந்து என்னிடம் 90 நாட்களில் அறிக்கையை சமர்ப்பியுங்கள்' என பைடன் கூறியதாக தகவகள் தெரிவிக்கின்றன.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad