Header Ads

  • சற்று முன்

    ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு... அப்போ ஓ.பி.எஸ்ஸின் நிலை ???


     

    நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து  எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், இன்று காலை மீண்டும் கூட்டம் நடைபெற்றது. 


     சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 3 மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒருவழியாக  தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    இது குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ  ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


    எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்த கடிதம், அதிமுக சார்பில், தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் பேரவை செயலரிடம் அளித்தனர்.

    அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், கூட்டத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் அதிருப்தியுடன் வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

     ஓ.பி.எஸ்ஸின் நிலை என்ன?? 

    ஏற்கெனவே  முதல்வர் பதவி கையைவிட்டு போன நிலையில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியும் பறிபோயிருக்கிறது. முன்னதாக தேனி மற்றும் தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்ஸின் செல்வாக்கு  குறைந்துவிட்டதையே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் காட்டுகிறது. இந்நிலையில் ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் . ஒருபுறம் ஓபிஎஸ் சசிகலாவை சந்தித்து  , அதிமுகவின் தலைமையேற்குமாறு அழைப்பார் எனவும் கூறப்படுகிறது..


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad