Header Ads

  • சற்று முன்

    பதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள்... அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்...

     

     



    முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்தே ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.தலைமைச் செயலாளார் உள்ளிட்ட அதிகாரிகளை தேர்வு செய்வதிலிருந்து அவரது நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவையாக இருந்து வருகிறது.இந்நிலையில் அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அமைச்சர்கள் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்மேலும் அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் உள்பட அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், அதனை எப்போது கேட்டாலும் சரியாக சொல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், மக்களுக்கு நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் எனவும், கூறியிருக்கிறார். 

     தொகுதிக்குள் ஏதேனும் பிரச்சனை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடலாம் என்றும், வெற்றிபெற்ற பல எம்.எல்.ஏக்களில் அமைச்சராகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளதால் பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் அமைச்சர்களிடத்தில்  தெரிவித்திருக்கிறார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad