Header Ads

  • சற்று முன்

    கொரோனா சிகிச்சைக்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எவ்வளவு கட்டணம் பெறலாம்னு தெரியுமா??

     



    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் அரசு மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள், கண்காணிப்பு மையங்களில் படுக்கை வசதிகளை அதிகரித்து கொரோனாவுக்கு சிகிச்சையளித்து வந்தாலும், மற்றொரு புறம் நோய்ப் பரவலின் வேகத்துக்கு ஈடுகட்டும் வகையில் படுக்கைகளை விரிவுபடுத்த முடியாத நிலை உள்ளது. 


     
    இதனால் தனியார் மருத்துவமனைகள் அரசுடன் கைகோர்த்து கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க வலியுறுத்தப்பட்டது.  ஆனாலும் அரசு நிர்ணயித்த கட்டண வரம்பு குறைவாக இருப்பதால் பல தனியார் மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கவில்லை.. இதனைத்தொடர்ந்து  தனியார் மருத்துவ மனைகள் 50% படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு  ஒதுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள்ளின் மருத்துவ கட்டணத்தை  முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.  இதற்கான அரசாணையை சுகாதாரத்துறை திங்கட் கிழமை வெளியிட்டது. 
     


    அதிகபட்சமாக  எவ்வளவு தொகை பெறலாம்?

     இருந்தபோதிலும், பல தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அதிலும் ஆக்ஸிஜன் வசதி தேவைப்படும் நோயாளிகளுக்கு கூடுதல் செலவாகிறது. எனவே நோயாளியின் முழு கட்டணத்தையும் அரசு ஏற்க இயலாது. வரையறுக்கப்பட்டுள்ள,அதாவது கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.7,500 மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு ரு.15,000 மட்டுமே அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ளது. அதன்படி தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளி ஒரு வாரம் சிகிச்சை பெற்றாலும் கூட ரூ. 1 லட்சம் வரை மட்டுமே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  பயன்பெற முடியும்...

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad