Header Ads

  • சற்று முன்

    திரைப்பட துணை நடிகர் மாறன் கொரோவினால் மரணம்...!!

     


    கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் ‘ஆதிவாசி’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மாறன். இதனைத்தொடர்ந்து பட்டாசு, தலைநகரம், டிஷ்யூம், வேட்டைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திலும் நடித்துள்ளார்.

    செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த நடிகர் மாறன், கொரோனா தொற்றால் பாதிகப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாறனின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad