Header Ads

  • சற்று முன்

    பேருந்துகளில் ஆக்ஸிஜன் படுக்கை, சிசிடிவி கேமரா- தமிழக அரசு திட்டம்..


    சென்னை:  பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

    அதன்பின், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், "பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


     இதனிடையே, சென்னையில் 1,400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு பல வழித்தடங்கள் விரைவில் விரிவுபடுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.


    ஆக்சிஜன் இருப்பு நிலையை பொருத்து, பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றி சிகிச்சையளிக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக சுகாதாரத்துறையினரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.


    தமிழகத்தின் முதல்வராக  மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழகம் முழுவதும் சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பெண்கள் பாதுகாப்புக்காக பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad