Header Ads

  • சற்று முன்

    இன்று முதல் அமலுக்கு வரும் ஆவின் பால் விலை...!

     




    கடந்த 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மக்களுக்கு தேவையான பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முதற் கட்டமாக ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்றுு முதல் (மே 16) அமலுக்கு வருகிறது.

    எனவே, இன்று முதல் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைத்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரின் விலை ரூ. 43லிருந்து ரூ. 40ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சமன்படுத்தப்பட்ட பால் அரைலிட்டர் 21.50 ல் இருந்து 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.23.50ல் இருந்து 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நிறை கொழுப்பு பால் அரைலிட்டர் 25.50ல் இருந்து 24 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.20ல் இருந்து 18.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீமேட் ஒரு லிட்டர் பால் விலை ரூ.60ல் இருந்து 57 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad