Header Ads

  • சற்று முன்

    முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கை என்ன? பிரதமர் மோடியுடன் நாளை ஆலோசனை!!

     


    இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா  பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பல மாநிலங்கள் பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு சற்று குறைந்திருக்கிறது.

     

    ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் அனைத்து மாநிலங்களும் அதிகளவில் கோரப்பட்டதால் மாநில அரசுகளே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.இது குறித்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 46 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 
     
    இந்த ஆலோசனையில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கலாம் என கூறியிருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நிலவரம் குறித்து மு.க. ஸ்டாலின் எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad