Header Ads

  • சற்று முன்

    வதந்திகளை நம்ப வேண்டாம் - கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது...



    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூச்சி திணறல் காரணமாக  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


    ''தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்''.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad