Header Ads

  • சற்று முன்

    டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை தடை செய்ய வாய்ப்பு...மத்திய அரசு தகவல்...




    டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில், நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதுடன், வெறுப்புணர்வை தூண்டும் பொய்யான பிரசாரங்களால் வன்முறைகளை தூண்டுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ஒழுங்குமுறை விதிகளை வகுத்து, பிப்ரவரியில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

    இதேபோல்  ஓ.டி.டி., எனப்படும், 'ஆன்லைன்' வாயிலாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பிவரும், 'நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம்' போன்ற தளங்களுக்கும், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் விதிகளை வகுத்து அறிவித்தது. 'இந்த புதிய கட்டுப்பாடுகள், மூன்று மாதங்களுக்கு பின் அமலுக்கு வரும்' என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

    இந்த கட்டுப்பாடுகள் அமலாவதற்கு, புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு, டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பெரும்பாலான சமூக ஊடகங்கள் இணங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. புதிய விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் சமூக ஊடக நிறுவனங்கள் மீது, குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இதனால், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டுவிட்டர் நிர்வாகத்துக்கு 'நோட்டீஸ்'கொரோனா சூழலை பயன்படுத்தி, பிரதமர் மோடியின் நற்பெயரை களங்கப்படுத்த, காங்., கட்சி, 'டூல்கிட்' எனப்படும், வழிகாட்டுதல்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டதாக, பா.ஜ., குற்றஞ்சாட்டியது. அது குறித்த பதிவை, பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்தார்.


    அந்த பதிவின் கீழ், 'ஏமாற்றுவதற்காக திருத்தி மாற்றப்பட்ட பதிவு' என, டுவிட்டர் நிர்வாகத்தால் குறிக்கப்பட்டுள்ளது. டுவிட்டரின் இந்த நடவடிக்கைக்கு, பா.ஜ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டுவிட்டருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், டுவிட்டர் நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு, டில்லி போலீசார் நேற்று 'நோட்டீஸ்' அனுப்பினர். டில்லி, ஹரியானாவின் குருகிராம் உள்ளிட்ட இடங்களில் உள்ள டுவிட்டர் அலுவலகங்களுக்கு நேரில் சென்ற சிறப்பு பிரிவு போலீசார், அதற்கான நோட்டீஸை வழங்கினர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad