Header Ads

  • சற்று முன்

    கொரோனாவிற்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு..


    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் இணைந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது.

    டிஆர்டிஓ கண்டுபிடித்த 2-டிஜி மருந்து மிகவும் பாதுகாப்பானது என்றும் கொரோனா நோயாளிகள் விரைந்து குணமாக அது உதவும் என அறிவிக்கப்பட்டது.. கொரோனா நோயாளிகள் 2 முதல் 3 நாட்கள் முன்னதாகவே குணமாகினார் எனவும் தெரிவிக்கப்பட்டது

    தடுப்பூசி மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் என கூறி வந்த நிலையில் தற்போது இந்த மருந்தும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கொனாரோவுக்கு எதிரான 2-DG என்ற மருந்தை தயாரித்துள்ளது. வாய்வழியாக உட்கொள்ளும் வகையில் இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கவேண்டும்.


    டி.ஆர்.டி.ஓ ஆய்வகம் மற்றும் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இணைப்பில் இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளன.இந்த மருந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவும் அத்துடன் ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலையையும் கடக்க உதவுகிறது. எனவே, அவசரகால தேவைக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.


    இந்த மருந்து டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் அறிமுகம் செய்தனர். முதல்கட்டமாக 10,000 மருந்து பாக்கெட்டுகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார். இந்த மருந்துகள் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் விரைவில் சப்ளை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா நோய்க்கான தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG மருந்து சந்தையில் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் அவர் 10,000 2DG கொரோனா மருந்து பாக்கெட்டுகள்   சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad