Header Ads

  • சற்று முன்

    தமிழக அரசு அதிரடி உத்தரவு..புதிய ஆட்சியர்கள் நியமனம்.. எந்தெந்த மாவட்டங்கள்..?


     தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு பல அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது  5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    தருமபுரி, திருச்சி, மதுரை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியராக அனீஷ் சேகர் ஐ.ஏ.எஸ், சேலம் ஆட்சியராக கார்மேகம் ஐ.ஏ.எஸ், கடலூர் ஆட்சியராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ், திருச்சி ஆட்சியராக சிவராசு ஐ.ஏ.எஸ் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad