Header Ads

  • சற்று முன்

    பிபிஇ கிட் அணிந்த முதல்வர்

     


    நாட்டையே உலுக்கி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தபட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில்  ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:

    ஒருநாள் முழுவதும் பிபிஇ கிட்டுடன் பணிபுரியும் மருத்துவர்களை ஊக்குவிக்கவே பிபிஇ கிட் அணிந்து மருத்துவமனைக்குள் சென்றேன்.கடந்த சில தினங்களாக சென்னையை விட கோவையில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. இரண்டு நாட்களாக கொரோனோ தொற்று குறைந்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் முடுக்கிவிட்டு கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கோவையில் மாநகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 


    கடந்த 27 ஆம் தேதி அந்தந்த மாவட்டத்திற்கு காணொளி காட்சி மூலம் கொரனோ தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் கேட்டறிந்தேன். கோவை மாவட்டதில் நான்கு ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சீனிவாசா கல்யாண மண்டம், கொடிசீயாவில் சிறப்பு சித்தா மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 10 ஆம் தேதி முதல் அதிக அளவில் கொரோனோ பரிசோதனை செய்து வருகிறோம். நாங்கள் ஆட்சி அமைத்த பிறது 1.56 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். கொரோனா தடுப்பு பணியில் கோவை மாவட்டம் அரசியல் காரணமாகப் புறக்கணிக்கப்படவில்லை. கோவையில் நாங்கள் உருவாக்கி வைத்துள்ள உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டால் அவ்வாறு சொல்லமாட்டார்கள். கோவை மட்டும் இல்லை, எல்லா ஊரும் எங்கள் ஊர்தான். இந்தியாவிலேயே அதிக அளவு ஆக்சிஜன் வசிதியுடைய படுக்கை வசதிகளை செய்து வருகிறோம் என்று  மு.க.ஸ்டாலின் கூறினார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad