Header Ads

  • சற்று முன்

    கொரோனாவால் யூபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு ..


     

     கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், சிவிச் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக  யூபிஎஸ்சி அறிவித்துள்ளது. 

    இந்திய ஆட்சி குடிமைப் பணிகள் எனப்படும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வில்(prelims) தேர்ச்சி பெறுபவர்கள், முதன்மைத் தேர்வுக்கு (mains) அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்தத்தேர்வினை நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுவர். 

    ஆனால், இந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலை  பரவல் காரணமாக முதல் நிலைத்தேர்வு ஜூன் மாதம் 27 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொற்று பரவலால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்த மத்திய பணியாளர் தேர்வாணையம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் தேர்வர்கள் மற்றும் ஆலோசகர்கள் வரவேண்டியதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

     


    இதுகுறித்த அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ''நாடெங்கும் கோவிட்-19 இரண்டாம் அலை பரவல் நிலையைக் கருத்தில் கொண்டு யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை நடத்துவது சாத்தியமில்லை.

    சிவில் தேர்வின் முதல்நிலைத் தேர்வு (prelims) ஜூன் 27 ஆம் தேதி அன்று நடப்பதாக இருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் நிலைத்தேர்வு அக்டோபர் 10 ஆம் தேதி நடக்கும்'. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு தேர்வானவர்களுக்கான நேர்முகத்தேர்வும் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் முதல் நிலைத்தேர்வும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad