Header Ads

  • சற்று முன்

    சிதறும் மக்கள் நீதி மய்யம்: அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்...

     


    நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வ...

    Read more at: https://tamil.asianetnews.com/politics/santosh-babu-resigns-from-makkal-needhi-maiam-qt1et0
    நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வ...

    Read more at: https://tamil.asianetnews.com/politics/santosh-babu-resigns-from-makkal-needhi-maiam-qt1et0

    நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் தோல்வியை சந்தித்தது..தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அக்கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருக்கிறார்கள். 

    முதலில் அக்கட்சியின் துணைத்தலைவர் ஆர். மகேந்திரன், முருகானந்தம், குமரவேல் உள்ளிட்டோர் கூண்டோடு விலகினர். கமல், தமிழகத்தை செயற்படுத்துவதற்கு முன்னர் கட்சியை சீர்படுத்த வேண்டும் என்று டாக்டர் ஆர். மகேந்திரன் கூறியிருந்தார். 


     

    இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு, என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad