Header Ads

  • சற்று முன்

    சக்தி மசாலா நிறுவனம் கொரோனா நிவாரண நிதிக்காக அளித்த தொகை எவ்வளவு தெரியுமா..?




    தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கொரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும் , பல்வேறு நிவாரண பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்ட சக்தி மசாலா நிறுவனம், இந்த ஆண்டும் அதனை செவ்வனே செய்து  வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, சக்தி மசாலா நிறுவனம் ரூபாய் 5 கோடி தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. இந்த நிவாரண நிதியை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு மே.15 -ஆம் தேதி வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 


    மேலும், சக்தி மசாலா நிறுவனம் முதல்வருக்கு  கடிதம்  ஒன்றை அனுப்பியுள்ளன.அதில், கூறியதாவது:


    ” தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுகாதாரம், வருவாய் துறை, காவல்துறை, உணவு வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்பு துறை, மாநில பேரிடர் மேலாண்மை துறை, உள்ளாட்சி துறை, அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், களப்பணியாற்றி வரும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளில் போர்க்கால அடிப்படையில் இரவு, பகலாக ஓய்வின்றி சிறப்பாக பணிபுரிந்து வருவதை சக்தி மசாலா நிறுவனம் சார்பில் வணக்கத்தையும், பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.”

    ”கூடிய விரைவில் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு பொது மக்கள் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறது”  என  நிர்வாக இயக்குநர்கள் பி.சி துரைசாமி. சாந்தி துரைசாமி தெரிவித்துள்ளனர்.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad