Header Ads

  • சற்று முன்

    பெண் காவலருக்கு பாலியல் தொல்லை...உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..


    தமிழகத்தில் கொரோனா  இரண்டாம் அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் முன்கள பணியாளர்களாக போராடி வருகின்றனர். தற்போது முழு முடக்கம் அமலில் இருப்பதால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பெண் காவலருக்கு உதவி ஆய்வாளர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் காவல்துறை வட்டாரங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆா் நினைவிடங்கள் பாதுகாப்பு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் எஸ்.ராஜ்  கடந்த 12ஆம் தேதி அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்த ஆயுதப்படை பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் அங்கிருந்து வெளியேறினார். இது குறித்து அந்தப் பெண் காவலா், உயர் அதிகாரகளிடம் புகாா் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பெண் காவலருக்கு உதவி ஆய்வாளர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.


    இதையடுத்து காவல் ஆய்வாளர் ராஜை பணியிடை நீக்கம் செய்ய கிழக்கு மண்டல இணை ஆணையா் வி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டாா். இது தொடா்பாக விசாரணை செய்ய விசாகா கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக விசாரணை செய்ய விசாகா கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad