Header Ads

  • சற்று முன்

    பாலியல் புகார் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்


    சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியராக பணியாற்றுகிறார் ராஜகோபால். இணையவழி வகுப்புகளின் போது ஆசிரியர் ராஜகோபால் பாலியல் ரீதியாக பேசுவதில் ஈடுபட்டிருந்தார். இவர் மீது மாணவிகள் தொடர்ந்து பாலியல் தொல்லை புகார்கள் கொடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து  பள்ளி ஆசிரியர் ராஜகோபால், அவர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகம் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

    இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் இணையவழி  வகுப்பில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கூடுதல் விதிமுறைகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. சென்னையில் இணையவழி வகுப்பில் பள்ளி ஆசிரியர் ஆபாசமாக நடந்து கொண்டு சம்பவத்தை அடுத்து விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



    அதன்படி, இணையழி  வகுப்பின் போது ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் மாணவர்களுடன்  பேசக்கூடாது எனவும் இணையவழி வகுப்பிற்காக ஒதுக்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மட்டுமே எந்த செய்தியாக இருந்தாலும் வெளியிடவேண்டும். தனிப்பட்டமுறையில் இந்த செய்திகளையும் அனுப்பக்கூடாது என போன்ற விதிமுறைகளை அரசு விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மேலும், பாலியல் தொடர்பான பிரச்சினைகள் வரும்போது அவற்றை விசாரிக்க உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவை அமைப்பது பற்றியும், ஆன்லைன் வகுப்பில் பள்ளி ஆசிரியர் ஆபாசமாக நடந்து கொண்ட வழக்கு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு குழு அமைத்து அந்தக் குழு விசாரணை நடத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக நாம் புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad