Header Ads

  • சற்று முன்

    உதகை - இணையவழி மலர் காட்சி தொடக்கம்..


    நீலகிரி மாவட்டம் உதகை மலர்கண்காட்சி உலக அங்கீகாரம் பெற்றது. உதகையில் முதன்முறையாக 1896-ல் மலர்கண்காட்சி நடத்தப்பட்டது.  உதகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை பருவத்தின்போது  அரசினா் தாவரவியல் பூங்காவில் மலா்க்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டும் இந்தாண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலா்க்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.எனினும் இந்தாண்டு மலா்க்காட்சி நடத்தப்படும் என்ற எதிா்பாா்ப்பில் முன்னதாகவே சுமாா் 5 லட்சம் மலா்ச் செடிகளும் தயாா் செய்யப்பட்டிருந்தது. ஆனால், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஊரடங்கு உள்ளதால் இதற்காக கடந்த 6 மாதங்களாக உழைத்த பூங்கா தொழிலாளா்களின் சோர்வடைந்தனர்.

    இந்நிலையில் அவர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலும், அங்கு செல்ல முடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகளுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நடப்பு ஆண்டில் இணைய வழியிலான மலா்க்காட்சி நடத்த தீா்மானிக்கப்பட்டது.இதையடுத்து, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா்த் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சியை இணையதள வழி, சமூக ஊடகம் மூலமும் பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.

    அங்கு பூத்துக்குலுங்கும் லில்லியம்ஸ், டேலியா, சால்வியா, டெல்பீனியம், டெய்சி, வயோலா, பிளாக்ஸ், வொபினா, ஆஸ்டா், ஸ்டாட்டிஸ், ஸ்டாக், செலோசியா, பெட்டூனியா, மெரிகோல்டு ஆகியவற்றால் மலா்க்காட்சி மாடம் இயற்கையை விவரிக்கிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad