Header Ads

  • சற்று முன்

    மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிட்டு கட்டிக்கொள்ளலாம்.. - மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு..


     

     கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு  அதிகம் இருந்த காலக்கட்டத்தில் மின் கட்டணமாக,  முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்த மின்சாரவாரியம் அறிவுறுத்தியிருந்தது. அதோடு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பலரும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள இந்த சூழலிலும் அதே நிலை கடைபிடிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் இருந்து வந்தது. 



     ஆனால் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மே மாதத்திற்கான மின்கட்டணத்தை  பயனாளர்களே ( பொதுமக்கள்) கணக்கிட்டுக்கொள்ளலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின் மீட்டரில் உள்ள அளவை புகைப்படமாக தங்கள் மின்வாரிய உதவி பொறியாளருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கவேண்டும். பின்னர் ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது

    இதனால்  கூடுதலாகவோ  அல்லது  குறைவாகவோ மின்கட்டணம்   கட்டும் நிலை இருக்காது.  மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad