Header Ads

  • சற்று முன்

    பாலாபிஷேகம் செய்யாதீர்கள்.. அதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள்... - சோனு சூட் வேண்டுகோள்..

     

    கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கிய காலம் முதலே, நடிகர் சோனு சூட் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தனக்கு சொந்தமான நட்சத்திர விடுதியை கொரோனா களப்பணிக்கு பயன்படுத்த கொடுத்தார். ஊரடங்கு நெருக்கடியால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த  ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை  சொந்த செலவில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

    அதுமட்டுமின்றி வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் இந்தியா திரும்ப தனி விமானம், வேலைவாய்ப்பு, மொபைல் டவர் இல்லாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு மொபைல் டவர்,  மகள்களை வைத்து நிலத்தை உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது  என எண்ணற்ற உதவிகளைச் செய்தார்.

    அதே போல அவரது சேவைகள் இந்த ஆண்டும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவரை நாக்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர உதவினார். மேலும் ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் கொரோனா  நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்து தருவது என தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சோனு சூட் ரசிகர்கள் சிலர் ஆளுயர சோனு சூட் பேனருக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதே போல தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

    இதில் ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர்  சோனு சூட், பாலை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad