Header Ads

  • சற்று முன்

    நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்...

    தமிழ் சினிமாவில் 80 களில் தொடங்கி தற்போது வரை நகைச்சுவை  மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கி வந்தவர் நெல்லை சிவா.. 1985 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 

    வகைப்புயல் வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் அனைத்துமே பெரிய ஹிட்.. அதிலும் “கெணத்தைக் காணோம்” நகைச்சுவைக் காட்சி மூலம் மேலும் பிரபலமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரிலும் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். 


     

    நெல்லையில் வசித்து வந்த சிவா, திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (11.05.2021) மாலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் பணகுடியில் அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெற உள்ளது.அவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள இந்த காலக்கட்டத்தில் கொரோனாவாலும், உடல்நலக் குறைவாலும் பல திரைத்துறை பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நெல்லை சிவாவின் இறப்பும் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது..


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad