Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் அதிர்ச்சி..!!கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி...


    போளூரை சேர்ந்த மருத்துவர் ராமலிங்கம் - மணியம்மாள் தம்பதியினரின் மகள் கார்த்திகா (28). மருத்துவரான கார்த்திகாவின் கணவர் கார்த்தியும் மருத்துவர் ஆவார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடந்துள்ளது.

    கார்த்தி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், மருத்துவர் கார்த்திகாவிற்கு கடந்த வாரம் போளூரிலுள்ள வீட்டில் சீமந்த நிகழ்ச்சி நடந்து முடிந்து. இதற்குப் பின் குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து கார்த்திகாவுக்கு எடுத்த கொரோனா டெஸ்ட்டில் பாஸிடிவ் என வந்ததையடுத்து குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் மருத்துவர் கார்த்திகாவின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    சில தினங்களுக்கு முன்பு மதுரையில் ஆரம்ப சுகாதார நிலை மருத்துவரான 30 வயதான சண்முகப்ரியா உயிரிழந்தார். இதையடுத்து கர்ப்பிணி மருத்துவர்களுக்கு கொரோனா பணியில் விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad