Header Ads

  • சற்று முன்

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ’அண்ணாத்த’...

     


    கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கிகொள்ளாமல் இருக்க மமக்கள் தடுப்புசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு அந்தப்புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். 

    அந்தவரிசையில் நடிகர் ரஜினிகாந்தும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.  சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிரார்  ரஜினி. இந்த திரைப்படத்தில்  குஷ்பு, மீனா, நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலா் நடிக்கின்றனர்.

    கொரோனா பரவல் மற்றும்  ரஜினியின் உடல்நிலை போன்ற  பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது  தடைபட்டது. ரஜினியின் உடல்நிலை சீரானவுடன் சென்னையிலும் பிறகு ஹைதராபாதிலும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பிய ரஜினி கொரோனா தடுப்பூசியை இன்று (13.05.21)  செலுத்திக்கொண்டார். இத்தகவலை அவருடைய மகள் செளந்தர்யா, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad