Header Ads

  • சற்று முன்

    கருமேகங்களுடன் காட்சியளிக்கும் சென்னை..கோடை மழையால் மக்கள் கொண்டாட்டம்..


    சென்னையில் (20.05.2021) அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கருமேகங்கள் சென்னையின் பிரதான பகுதிகளை ஆட்கொண்டுள்ளதால் சென்னை மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

    காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருச்சி, சிவகங்கை, திருவள்ளூர் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள ஆவடி, தாம்பரம், அம்பத்தூர், கொரட்டூர், திருவள்ளுர், பெரியகுப்பம், தாமரைப்பாக்கம் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களின்  கருமேகங்கள் சூழ்ந்து, பகலே இரவு போல காட்சியளித்து வருகிறது.இதனிடயே நீலகிரியிலிருந்து செங்கல்பட்டு வரை மேகக்கூட்டம் நீண்டிருக்கிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரம் கடும் மழை பெய்யும் என எச்சரித்துள்ளதால், சென்னையில் 5 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகும் எனத் தெரிகிறது.கடந்த சில நாட்களாக வெயிலின் வெப்பம் காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்ட மக்கள், வேலூர் மாவட்ட மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலையில் மதியத்துக்கு மேல் சென்னையும் அதன் புறநகர் மாவட்டங்களும் குளிர்ந்தன.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் பதிவிட்டுள்ளனர். 


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad