Header Ads

  • சற்று முன்

    இந்தியாவை தொடரும் பேராபத்து!! பீஹாரில் மேலும் புதிய நோய் கண்டுபிடிப்பு...


    இந்தியாவில்  பல்வேறு மாநிலங்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் கருப்பு பூஞ்ஞை 
    எனப்படும் மியுகோர்மைகோகிஸ்  தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த தொற்றுக்கு  பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்ஞை  பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தை பொறுத்தவரை கருப்பு பூஞ்சையால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி கருப்பு பூஞ்ஞை நோயை, தொற்று நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது கருப்பு பூஞ்சையைவிட ஆபத்தான வெள்ளை பூஞ்ஞை நோய் பிஹாரில் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளை பூஞ்ஞை நோய் நுரையீரலை பாதிக்கிறது என்றும் தோல், நகம், வாயின் உட்பகுதி, வயிறு, குடல், சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்பு, மூளை ஆகியவற்றையும் பாதிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

    இதுகுறித்து பாட்னா மருத்துவமனை மைக்ரோபயோலஜி துறை தலைவர் மருத்துவர் எஸ்.என்.சிங் கூறியதாவது:

    "எங்களது மருத்துவமனையில் 4 நோயாளிகள் வெள்ளை பூஞ்ஞை நோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் உள்ளன. ஆனால் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. பூஞ்ஞைக்கான எதிர்ப்பு மருந்துகள் மட்டுமே 4 நோயாளிகளுக்கும் பலன் அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீரழிவு நோயாளிகள் வெள்ளை பூஞ்ஞையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்" என்றார்.இந்நிலையில் வெள்ளை பூஞ்ஞை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு HRCT சோதனை செய்யும் போது கொரோனா போன்ற ஒரு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளை பூஞ்ஞை தொற்று நுரையீரலையும் தாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆக்ஸிஜன் ஆதரவில் இருக்கும் கொரோனா நோயாளிகளையும் வெள்ளை பூஞ்ஞை பாதிக்கிறது.  புற்றுநோயாளிகள் வெள்ளை பூஞ்ஞைக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் குழந்தைகள் மற்றும் பெண்களையும் வெள்ளை பூஞ்ஞை தொற்று பாதிக்கிறது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad