Header Ads

  • சற்று முன்

    சபாநாயகர் பதவிக்கு திமுக எம்.எல்.ஏ அப்பாவு மனுதாக்கல்...போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு...


    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது. இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது.16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகை. பேரவையின் தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டிக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்று கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.


    கு.பிச்சாண்டிக்கு நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக 16வது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக, திமுக சார்பில் அப்பாவு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சட்டப் பேரவைச் செயலாளரிடம் தாக்கல் செய்தனர்.

    நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

    அதைத்தொடர்ந்து, தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி அறிவிக்கப்பட்டார். அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் கவர்னர் செய்து வைத்தார். தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவி ஏற்கும் வகையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தனர்.


    இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டியை முன்மொழிந்து நீர் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மனு தாக்கல் செய்தார்.

    சட்டப்பேரவைத் தலைவர்(சபாநாயகர்) மற்றும் துணைத் தலைவர்(துணை சபாநாயகர்) தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று(மே.11) பகல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.இதில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லையெனில், அப்பாவு மற்றும் பிச்சாண்டி ஆகியோர் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டதாக, சட்டப்பேரவைச் செயலாளர் அறிவிப்பார்.

    அதனைத் தொடர்ந்து நாளை(மே.12) காலை சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு பதவியேற்பார்.



    இதனை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் திமுக எம்எல்ஏ அப்பாவு வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது முதல் அமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.திமுக எம்.எல்.ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad