Header Ads

  • சற்று முன்

    ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் - மு.க.ஸ்டாலின் உத்தரவு....


    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொது மக்கள் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்காமல் இருந்தன.கொரோனா பரவல் குறித்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். முழு ஊரடங்கை தீவிரப்படுத்த சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. அதன்படி புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    புதிய கட்டுப்பாடுகள்

    ATM, பெட்ரோல் பங்குகள், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதி.

    நடைபாதை கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை.

    வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

    நாளை முதல்‌ தமிழகத்தில்‌ தேநீர் கடைகள்‌ இயங்க அனுமதி கிடையாது.

    மே  17 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் கட்டாயம்.

    ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடரும்.

    E-Commerce நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி என புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை போன்றவற்றை வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad