Header Ads

  • சற்று முன்

    பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை... ரசிகர்கள் வாழ்த்து..

     



    நான்கு தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள் என தன் இனிமையான குரல் மூலம் விருதுகளை அள்ளிக்குவித்தவர் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி அசத்தி வருகிறார். ஸ்ரேயாவின் குரலுக்கு மயங்காதவர்களே இல்லை எனச் சொல்லலாம், அவ்வளவு ரசிகர் பட்டாளங்களை கொண்டிருக்கிறார். 

    தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியிருக்கிறார். பிதாமகன் படத்தில், 'இளங்காற்று வீசுதே..' 7ஜி ரெயின்போ காலனி' படத்தில், 'நினைத்து நினைத்து ', கமலின் 'விருமாண்டி' படத்தில், 'உன்னை விட ', 'சில்லுனு ஒரு காதல்' படத்தில், 'முன்பே வா என் அன்பே வா', பருத்திவீரன் படத்தில், 'ஐயையோ..' ’ஜில்லா’ படத்தில் ‘கண்டாங்கி கண்டாங்கி’ மற்றும் ‘என்.ஜி.கே’ படத்தில் வரும் ‘அன்பே பேரன்பே’ உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

    இவர் ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை , கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி அம்மாவாகப் போவதாக அறிவித்திருந்த ஸ்ரேயாவுக்கு, இன்று  ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

     


    இதை அவர் சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், இறைவனின் அருளால் இன்று மதியம் எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கு முன் அனுபவைக்காத ஒரு மகிழ்ச்சியை இப்போது உணர்கிறேன். ஷைலாதித்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களின் ஆசிர்வாதத்துக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad