Header Ads

  • சற்று முன்

    தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்


     

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் திராவிட முன்னேற்றக் கழகம் 125 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து மே 4 ஆம் தேதி நடைபெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை திமுக குழுத் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    மேலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட  கூட்டணிக் கட்சி  உறுப்பினர்கள் 8 பேரையும் சேர்த்து, மொத்தம் 133 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க  உரிமை கோரினார். அதனை ஏற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மு.க.ஸ்டாலினை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். 

    இதனையடுத்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளைகையில் பதவியேற்பு விழா( இன்று ) வெள்ளிக்கிழலை காலை 9 மணிக்கு தொடங்கி எளிமையாக நடைபெற்றது.



     விழாவின் தொடக்கமாக, முதலில் தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அப்போது,”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” எனத் உரையைத் தொடங்கி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். 

    ஸ்டாலினைத் தொடர்ந்து 33 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad