Header Ads

  • சற்று முன்

    பத்திரிக்கையில் பெயர் இருக்கா?? அப்போ நீங்க திருமணத்துக்கு இ-பதிவு சான்றிதழ் பெறலாம்...

     

    தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து வரும் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப் பட்டுள்ளது. தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமுடக்க விதிகளும்  கடுமையாக்கப்பட்டுள்ளது. சிலர் கட்டுப்பாடுகளை மீறுவதால் அது மேலும் தீவிரப்படுத்தப்படுள்ளது.

    அதன்படி, கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் அவசர பயணத்துக்காக இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இ-பதிவு முறை நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால், மீறி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர். 

    .இ-பதிவு முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.


     

     அதன்படி, மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோரே இ-பதிவு செய்ய முடியும். இ-பதிவின்போது திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஒரு இ-பதிவு சான்றிதழ் மட்டுமே பதிய முடியும். ஒரு திருமணத்திற்கான இ-பதிவில் பத்திரிகையில் உள்ள அனைவரின் விவரங்களை குறிப்பிட வேண்டும்.

    அனைத்து வண்டிகளின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண் பதிவிட வேண்டும். அதேபோல், பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயர், ஏதேனும் ஒரு அடையாள அட்டையும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், போலி திருமண பத்திரிகையை தயார் செய்தால் நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad