Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு....


    தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு தற்போது தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஒவ்வொரு நாளும் கொரோனா நிலவரம் குறித்து அறிக்கை வெளியிடுகிறது. அதன்படி இன்று  9,118 பேர் புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 23,97,864 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 9,118 பேர்களில் 559
    பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  கொரோனாவுக்கு 210 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 30,548 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


    மேலும் 22,720 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 22,66,793 ஆக உயர்ந்துள்ளது.   1,75,010 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 306,55,350 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad