Header Ads

  • சற்று முன்

    சீட்டுக்கட்டு போல் சரிந்தது குடியிருப்பு வளாகம்... பலி எண்ணிக்கை 100-யை தாண்டியது..


    அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி பகுதி மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் ஒன்றாகும். இங்கு கட்டுமான துறை, ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்க ரியல் எஸ்டேட் துறை பொதுவாக உலக அளவில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்க கூடியது.மியாமி பகுதியில் உள்ள இந்த கட்டிடம் 1981ல் கட்டப்பட்டது.  இந்நிலையில், புளோரிடாவில் உள்ள மியாமி கவுண்டியில் வியாழக்கிழமை அதிகாலை 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென சீட்டுக்கட்டு போன்று இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.


    இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய  35-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம், பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மியாமி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு உதவித் தலைவர் ரைடு ஜடல்லா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


    அனால் சம்பவம் நடந்தபோது கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காணாமல் போனவர்களை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர், சேதம் குறித்த சரியான தகவல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளன.


    கடற்கரை அருகே அழகாக அமைந்திருந்த குடியிருப்பு வளாகம் இடிந்து சரிந்தது அனைவரையும் ஆச்சரியத்திலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.பழமையான கட்டிடம் என்பது ஒரு காரணம். இன்னொரு பக்கம் அருகிலேயே நிறைய கட்டுமானம் பணிகள் நடைபெற்றதால் இந்த கட்டிடத்தின் அஸ்திவாரம் வலுவிழந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad