Header Ads

  • சற்று முன்

    12 ஆம் வகுப்பு தேர்வு எப்போது..? தேர்வு நடத்தப்படுமா..? பிரதமர் மோடி இன்று ஆலோசனை..


    கொரோனா நோய் தொற்று  2-வது அலை பரவியதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்தி வைத்தது.  பல மாநிலங்களிலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மாநில அரசுகள் தங்கள் விரிவான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வைக்க மத்தியஅரசு கேட்டுக்கொண்டது. இதன்படி பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அனுப்பியுள்ளன. ஆனால், என்ன மாதிரியான கருத்துக்களை அனுப்பியுள்ளன என்பது குறித்து மத்திய அரசு வெளியிடவில்லை. தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அதேசமயம் மாற்று முறையில் மதிப்பீடு செய்யலாம் என சில மாநிலங்கள் கூறியுள்ளன. இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் நடத்தவும், தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிடவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    சிபிஎஸ்இ திட்டப்படி முதலாவதாக பிரதான பாடங்களுக்கு மட்டும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வுகளை நடத்துவது, இரண்டாவதாக மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்திலேயே குறைந்த நேரத்தில் முக்கியப் பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவது என இருவேறு பரிசீலனைகள் உள்ளன.

    இதனிடையே 12 ஆம் வகுப்புத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரைணக்கு வந்தபோது கொரோனா  பரவல்களுக்கு மத்தியில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அடுத்த 2 நாட்களில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மத்திய கல்வியமைச்சர் பொக்ரியால் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் பங்கேற்கவில்லை. கல்வியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இன்றைய ஆலோசனையில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad