Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா??... முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..


    கொரோனா தொற்று பரவலின் மத்தியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் இயங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. வகுப்புகள் நடைபெறாத நிலையில் தேர்வுகள் நடத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வுகள் நடத்துவதா, ரத்து செய்வதா என ஆலோசனை நடத்தியதில்  சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

    இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது.

    இந்தக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுமா என்கிற குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நிலவி வந்தது. இதுகுறித்து பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவினை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார். இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad