Header Ads

  • சற்று முன்

    ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை..




    நாட்டையே புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  தமிழகத்திலும்  கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் இந்த ஊரடங்கை அலட்சியப்படுத்தி கொண்டு இருந்தன.இந்நிலையில், மேலும் ஒரு வாரம்  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 7ம் தேதி  முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.

    அதன் பலனாக  தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. அதேபோல் சென்னையிலும் கொரோனா குறைந்து வருகிறது . இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் நலனைக் கருதி காய்கறி, மளிகை பொருட்கள் வீடுகளுக்கு சென்று சேரும் வண்ணம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


    இந்நிலையில்  தலைமைச் செயலர், காவல் உயர் அதிகாரிகள், சுகாதாரத் துறைச் செயலர், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா பரவல் ஓரளவு குறைந்திருந்தாலும் மாவட்டங்களில் குறையாததைச் சுட்டிக்காட்டிய மருத்துவ நிபுணர்கள் ஊரடங்கை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளனர். மாநிலம் முழுவதும் கடுமையான ஊரடங்கு என்பதை மாற்றி சில மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அளித்து ஊரடங்கை அமல்படுத்தலாம் எனப் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மேற்கு மாவட்டங்களில் கோவை திருப்பூர், ஈரோடு நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இதே நிலை நீடிக்கும் என்று தெரிகிறது. தொற்று குறைவான பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு வழங்கலாம் எனவும் சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad