Header Ads

  • சற்று முன்

    செவிலியர் கவனக்குறைவு - பிறந்த 14 நாட்களே ஆன குழந்தையின் கட்டைவிரல் துண்டானது....


    தஞ்சாவூர் அருகே உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (34), விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், பிரியதர்ஷினி (20) என்ற பெண்ணுக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த பிரியதர்ஷினி பிரசவத்திற்காக தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 25-ம் தேதி பிரியதர்ஷினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்திலேயே பிறந்ததால்  குழந்தைக்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகக் கூறிய டாக்டர்கள், தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தனர். சத்துக்காகக் குழந்தைக்கு கையில் வென்ஃப்ளான்  வைத்து, அதில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது. பின்னர்  குழந்தையின் உடல்நிலை தேறியதால், தாயையும் சேயையும் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

    இந்நிலையில் குழந்தையின் கையிலிருந்த வென்ஃப்ளான் மற்றும் பிளாஸ்திரியை அகற்றுவதற்காக செவிலியர் கத்திரக்கோலால் வெட்டியுள்ளார்.அப்போது அவர் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் குழந்தையின் கை கட்டைவிரல் துண்டானது. இதைப் பார்த்த குழந்தையின் பெற்றோர் கணேசனும் பிரியதர்ஷினியும் பதறித் துடித்தனர். பின்னர் துண்டான கட்டைவிரலை சேர்த்து வைத்து தையலிட்டுக் கட்டுப்போட்டுள்ளனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரவிக்குமார், குழந்தையின் விரல் துண்டாகவில்லை, சதைப்பகுதி வெட்டப்பட்டுள்ளது. அதனை விரலுடன் இணைத்து தைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது. விரலுக்கு ரத்தம் ஓட்டம் செல்வதை வைத்தே அப்பகுதி சேருமா என்பது இரண்டு நாள்களில் தெரிய வரும்  என்றார்


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad