Header Ads

  • சற்று முன்

    திரைப்பட தொழிலாளர்களுக்கு 1.5 கோடி கொரோனா நிவாரணமாக வழங்கிய கே.ஜி.எஃப் பட நடிகர் யாஷ்...

     


    கொரோனா பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. தினக்கூலி பணியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், திரைப்பட கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் திரைப்படம் மட்டுமின்றி அனைத்து மொழித்திரைப்பட கலைஞர்களும் இதே நிலையிலேயே உள்ளனர்.   அவர்களுக்கு பல முன்னணி நடிகர்களும் நிவாரணம் வழங்கி வருகின்றனர். 

    அவர்கள் வரிசையில் பிரபல நடிகர் யாஷ்,  கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக  வழங்கியுள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள இவர், கேஜிஎஃப் படம் மூலம் மிகவும் பிரபலமானார்‍.

    இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கொரோனா தொற்றால் படப்பிடிப்பின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 3000 கன்னட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் ஒன்றரை கோடி ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்‍.

    இந்த மோசமான சூழலில், வலி மற்றும் இழப்புகளை சந்தித்திருக்கும் அவர்களுக்கு இத்தொகை தீர்வாகாது என்றாலும், நம்பிக்கைக்கான வெளிச்சமாக இருக்கும் என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்‍.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad