Header Ads

  • சற்று முன்

    நியூசிலாந்து அணி 15 வீரர்களின் பெயர் பட்டியல்...


    கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்துவருகின்றன. 
    இரண்டாவது டெஸ்ட் முடிவுவரை இந்திய அணி 69.7 புள்ளிகள் பெற்றுள்ளது. இதில் இறுதி ஆட்டத்திற்கு இந்திய- நியூநிலாந்து அணிகள் தகுதிபெற்றுள்ளன. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்டனில் நடைபெற இருக்கிறது. அண்மையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து வென்றது. இதனால் நியூசிலாந்து உற்சாகமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது. இந்தியாவும் இந்தப் போட்டியில் வெல்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கான 15 வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    நியூசிலாந்து அணி: 


    கேன் வில்லியம்சன், டாம் பிளண்டல், ட்ரெண்ட் போல்ட், டேவன் கான்வே, கிராண்ட்ஹோம், மாட் ஹென்ரி, ஜேமிசன், டாம் லேதம், ஹென்ரி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வாட்லிங், வில் யங்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad